வாகன விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மண்கும்பான் – கறுப்பாச்சி அம்மன் கோவிலடி பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் மீது, பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரின் பின் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், காரின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்