வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது!

 

வவுனியா மடுக்கந்தை அம்பலங்கொடல்ல பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டதுடன், கஞ்சாசெடியும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கைது நடவடிக்கை, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் பிரகீத் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.