வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று புதன்கிழமை இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேல் மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதன் காரணமாக, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.