வர்த்தகர்களிடமிருந்து அன்பளிப்பு பெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டணை

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டுக்காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில்  அவருக்கான தண்டனையை இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கியது.

அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில், பல்வேறு வர்த்தகர்களிடம் இருந்து ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர், ஐரோப்பிய இசை நிகழ்ச்சி போன்றவற்றுக்கான அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அவற்றின் பெறுமதி 3 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். இது தொடர்பான குற்றச்சாட்டு கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போது, அவர் பதவியிலிருந்து விலகினார்.

உலகில் ஊழல்கள் குறைந்த முதல் 5 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் சிங்கப்பூரில் கடந்த 1986ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு இவ்வாறான குற்றச்சாட்டின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர் முதல் தடவையாகத் தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு மோசடி குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்