வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலய தேரோட்டம்!
-மட்டக்களப்பு நிருபர்-
கிழக்கிலங்கையின் சிறப்புமிக்க வந்தாறுமூலை அருள்மிகு பூதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்திற்கு வருகை தந்த ஆண், பெண் அடியவர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர்.
இதன்போது மேள தாளங்கள் முழங்க, வேத பாராயணங்கள் விண்ணை முட்ட, அடியவர்களின் அரோகராக் கோசங்களுக்கு மத்தியில் அருள்மிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு பெருமான் தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இத்தேரோட்டப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்தனர்.
வரலாற்றில் முதல் தடவையாக இன்று தேரோட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்ஆலய மகோற்சவம் கடந்த 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆலய மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்