வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தை வென்றார்

-யாழ் நிருபர்-

வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

16 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் குகராஜ் சங்கவி என்ற மாணவியே 1.46M உயரத்தை பாய்ந்து முதலிடத்தை தனதாக்கி கொண்டார்.

குறித்த மாணவி இதற்கு முன்னரும் பல தடவைகள் உயரம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.