வடக்கு – கிழக்கு – ஊவா மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாட்டில் கிழக்கிலிருந்து குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதால், எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமைகளில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிதமான கனமழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.