
வட நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் தீ : 17 மாணவர்கள் உயிரிழப்பு!
வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாகவும், விபத்தில் 10 முதல் 16 வயதுடைய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்