வங்கிகளில் டொலரின் மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிஅறிவித்துள்ளது.

இதன்படி,  இன்று புதன்கிழமை டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மக்கள் வங்கி : கொள்முதல் விகிதம் ரூ. 297.31 முதல் ரூ. 296.58 ஆகவும்,  விற்பனை விலை ரூ. 313.30 முதல் ரூ. 312.53 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கி : கொள்முதல் விகிதம் ரூ. 298.18 முதல் ரூ. 297.68 மற்றும் விற்பனை விலை ரூ. 310.50 முதல் ரூ.310 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கி : கொள்முதல் விகிதம் ரூ. 299 முதல் ரூ. 298  ஆகவும்  விற்பனை விகிதம் ரூ.311 முதல் ரூ. 310 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்