![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/SriLankaTamilNewsToday-1.jpg)
லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸின் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீ காரணமாக சுமார் 30,000 பேருக்கு தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின் தடை கண்காணிப்பு இணையத்தளமொன்றின் தரவுகளுக்கமைய, சுமார் 2 இலட்சம் பயனாளர்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லொஸ் ஏஞ்சல்ஸின் அண்டை பிரதேசமான சான் பெர்னார்டினோவில் 13,600 பயனாளர்கள் மின்சார இணைப்பை இழந்துள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுவதால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.