லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த நபர் கைது

இந்தியாவில் ஐதராபாத்தில் லிவ்-இன் காதலியை கொடூரமாக கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வரும் சந்திர மோகன் (வயது – 48 ) என்பவர், தன்னுடன் லிவ்-இன் முறையில் தொடர்பில் இருந்த அனுதாரா (வயது – 55) என்பவரையே இவ்வாறு கொலை செய்துள்ளதுள்ளார்.

குறித்த நபர் அனுராதாவின் வீட்டில் தங்கயிருந்த நிலையில் அனுராதாவிடம் 7 லட்ச ரூபாய் பணம் பெற்று உள்ளார், அதனை திருப்பி தர கோரி நெருக்கடி கொடுத்தால், அனுராதாவை திட்டமிட்டு கடந்த 12 ஆம் திகதி கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் உடலை 6 பாகங்களாக வெட்டிய அவர், தலையை முசி நதியில் வீசியுள்ளார். அதனை கைப்பற்றிய பொலிஸார் தொடர் விசாரணைக்குப் பின் சந்திர மோகனை கைது செய்தனர்.

மேலும், வீட்டின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த அனுராதாவின் உடல்பாகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்