லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி!

-நுவரெலியா நிருபர்-

 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்புசல்லாவ எனிக் தோட்டத்தைச் சேர்ந்த அருமைவாசகம் கமலராஜா (வயது 20) என்பவரே உயிரிழந்தவராவாரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

உடப்புசல்லாவ பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழில் புரிந்து வந்த நிலையில் நேற்று லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள குளத்தில் நான்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை மாலை வேளையில் லிந்துலை பொலிஸாரும்இ பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர்

பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடுஇ பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.