லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நிறைவு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது.

இருப்பினும், அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டிகள் வரை அவர் இலங்கை அணியுடன் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணம் முடியும் வரை மலிங்கவின் சேவைகளை இலங்கை கிரிக்கெட் சபை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தாலும், மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர் லசித் மலிங்க அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.