
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான திகதி அறிவிப்பு
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6ஆவது அத்தியாயத்திற்கான புதிய திகதிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8-ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறும்.
இதற்கான வீரர்களுக்கான தெரிவு எதிர்வரும் மார்ச் 22-ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்காக மைதானங்களைத் தயார்படுத்தும் நோக்கில், கடந்த டிசம்பரில் நடைபெறவிருந்த இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
