ரயில் மோதி கார் சேதம்

பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜினு கடுகதி ரயில் இன்று ஞாயிற்று கிழமை மோதி கார் ஒன்று சேதமடைந்துள்ளது.

கொழும்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.