ரயில் பெட்டி கழிவறையில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் இறந்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின் பிரகாரம், ரயில் பெட்டியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் போது ரயில்வே துறையின் துப்புரவு பணியாளர் ஒருவரால் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. துப்புரவு பணியாளர் உடனடியாக தெமட்டகொட பொலிஸாருக்கு இந்த விடயம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிசுவின் எச்சங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு இன்று கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.