
ரயில் பருவச்சீட்டின் செல்லுபடி காலம் நீடிப்பு!
நவம்பர் மாதத்துக்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் இம் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே ரயில் பருவச் சீட்டுகளை வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையைக் கருத்தில்கொண்டு 2025 நவம்பர் மாதத்துக்கு செல்லுபடியாகும் மாதாந்த மற்றும் மூன்று மாத காலப் பருவச் சீட்டுகளை இம் மாதம் 07ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால்இ இது வாராந்த பருவச் சீட்டுகளுக்கு பொருந்தாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
