
ரயில் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பஸ்களில் பயணிக்க அனுமதி
புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை, பயணிகள் ரயில் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஸ்களில் பயணிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இன்று வரை 200 இற்கும் மேற்பட்ட தடைப்பட்ட வீதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
