ரயிலில் மோதி ஒருவர் பலி!
ஜா-எல – துடெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் ரயிலில் மோதி இன்று வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் இவர் ரயில் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் ரயில் வருவதை கண்டு உடனடியாக அங்கிருந்து செல்ல முயன்றபோதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.