ரஜினிக்கு சிறப்பு பாடலை வெளியிட்டு கமல் வாழ்த்து!

 

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசனும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கமைய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த பாடலில் “உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே… நண்பனே… ஊர் போற்றும் இன்பனே… இன்பனே… இன்பனே… நீ தனி நான் தனி என்றில்லை… என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே” எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன.