திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் வைத்து மீன் ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .
இந்த விபத்து சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஏறாவூருக்கு மீன் ஏற்றிச் சென்ற பட்டா வாகனமே இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளதோடு வாகனத்தில் பயணித்தோர் சிறு காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பி உள்ளனர் .
சம்பவ இடத்திற்கு சேருநுவர வீதி போக்குவரத்து பொலாஸார் வருகை தந்து விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர் .


