யாழ்.மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!
-யாழ் நிருபர்-
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது.
அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ். மாவட்ட இளைஞர்கள் பயிற்சி நிலையத்தில் காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது
இவ் சுற்று போட்டியில் யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச சம்மேளனங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சதுரங்க விளையாட்டு வீர வீராங்கனைகள் மிக ஆர்வமாக பங்குகொண்டதுடன், இதில் மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.