யாழ். பொதுநூலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

செப்ரெம்பர் மாதம் யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09.09.2022ம் திகதி யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடத்துனரிற்கு வழங்கப்பட்டது. மீண்டும் பொது சுகாதார பரிசோதகரால் 28.09.2022ம் திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் சிற்றுண்டிசாலை நடாத்துனரிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் மன்றில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சிற்றுண்டிச்சாலை நடத்துனர் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்டதையடுத்து 60,000/= தண்டம் நீதிமன்றால் விதிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிசாலையினை சீரமைக்கும் வரை சீல் வைக்குமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலை மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டது.

-யாழ் நிருபர்-

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP