யாழ்.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலில், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரு குழுக்களையும் சேர்ந்த 4 பேரும், மோதலை தடுக்க முயன்ற முச்சக்கர வண்டி சாரதியும் என ஐவர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.