யாழில் யுவதியின் கையை பிடித்து இழுத்த வியாபாரி: கடத்தி சென்று அடி கொடுத்த இளைஞர்கள்
யாழில் வியாபாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை யுவதியொருவரின் கையை பிடித்து இழுத்தும் நியாயம் கேட்க சென்ற காதலனை மிரட்டியுள்ளார். இவ் விவகாரம் முற்றியதையடுத்து அவரை கடத்திச் சென்று பலமாக தாக்கிய 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தர்மடம் அரசடி பகுதிகளை சேர்ந்த 3 இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ் நகரில் பழ விற்பனையில் ஈடுபடும் ஒருவர் பழம் வாங்க வருமாறு மக்களை கூவி அழைக்கும் சாக்கில் அந்த பகுதியால் நடந்து சென்ற யுவதியொருவரின் கையைப் பிடித்து இழுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்ததும் மறுநாள் யுவதியின் காதலர் அங்கு சென்று பழ வியாபாரத்தின் போர்வையில் மோசமான செயலில் ஈடுபட்டவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது யுவதியும் உடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களை பழ வியாபாரிகள் தரப்பில் மிரட்டியதாகவும் இருவரும் ஒன்றாக நிற்கும் காட்சிகளை எடுத்துள்ளதாகவும் அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிடவுள்ளதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பழ வியாபாரியை சில இளைஞர்கள் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பழ வியாபாரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்