
யாழில் மாயமான இளைஞன்
-யாழ் நிருபர்-
யாழ். பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணுவிலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலில் இருந்து இளைஞன் காணாமல்போனதாகவும் அவர் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல்போன இளைஞனை பற்றிய தகவல் அறிந்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
