யாழில் இடம்பெற்ற நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் திட்டம்

-யாழ் நிருபர்-

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் திட்டம் யாழில் சொண்ட் நிறுவனத்தின் ஊடாக யாழ் சர்வ மதக் குழு உடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் DIRC கூட்டம் நேற்றையதினம் நேற்று செவ்வாய்கிழமை மஸ்ஜிதுல் முகமதியா பள்ளியில் (புதுப்பள்ளி) நடைபெற்றது.

இக்கூட்டத்தினை யாழ் மாவட்ட சர்வ மத குழுவின் இணைப்பாளர் திருமதி ஜென்சி அவர்கள் வழிப்படுத்தியிருந்தார்.

மேலும் இன மத நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில் DIRC குழுவின் அங்கத்தவர்களான மத குருமார்கள், அரசு பணியாளர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் இடம்பெற்ற நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் திட்டம்
யாழில் இடம்பெற்ற நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் திட்டம்