யாழில் அடி காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் கணபதிப்பிள்ளை மகேந்திரன் (வயது 52) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று வெள்ளிக்கிழமை திருமணச் சடங்கிற்கு சென்ற வேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிரையில் இன்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும், இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்