யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

 

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை அண்டிய நாணல் காட்டுப்பகுதியில் நிலை கொண்டு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய சுமார் 40 யானைகளை புதன்கிழமை மாலை இவ்வாறு காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய செயற்பட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்குறித்த பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக காணப்பட்ட காட்டு யானைகளை சம்மாந்துறை அம்பாறை வன பிரதேசத்தை நோக்கி விரட்டியுள்ளனர்.

தற்போது நெல் விதைப்பு பருவ காலமாகையினால் இப்பகுதிகளில் உள்ள அனைத்த காட்டு யானைகளும் இனங்காணப்பட்டு அவற்றை அருகில் உள்ள காடுகளுக்குள் விரட்டும் பணிகளை தொடர்ந்தும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த வேலைத்திட்டத்தை பார்வையிட வரும் பொதுமக்களை சவளக்கடை பொலிஸார் கட்டுப்படுத்தி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.