யானை தாக்கியதில் வயோதிபரொருவர் மரணம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்று புதன் கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (வயது – 69 ) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தமது வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோதே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.