யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலை , கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கோமரங்கடவல – விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயின்று வரும் சிறுவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுவனின் தந்தை திருகோணமலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு செல்வதற்கு துவிச்சக்கர வண்டியில் சிறுவனுடன் சென்றுள்ளார்.
இதன்போது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வயல் பகுதியில் மறைந்திருந்த யானை இருவரையும் துரத்தியுள்ளது. மேலும் தந்தை தப்பி ஓடிய நிலையில் சிறுவன் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தலை துண்டிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளான்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.