மோட்டார் சைக்கிள் விபத்து: பாடசாலை மாணவன் பலி
தங்காலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்காலை, ஹேனகடுவ, பன்னவாச மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கொடிதுவக்கு ஆராச்சிகே சித்துல் சமூதய (வயது 19) என்ற, வீரகட்டிய நடுநிலைப் பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி பயின்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தங்காலை நகருக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்