மோடியின் பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு விசேட பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) தன்னுடைய 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .
அவருக்குப் பரிசளிக்கும் விதமாக, தன்னுடைய கையொப்பமிட்ட ஜெர்ஸி ஒன்றை மெஸ்ஸி பரிசளித்துள்ளார் .
உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அணியின் தலைவருமான லியோனல் மெஸ்ஸி, இவ்வருடத்தின் இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் .
மூன்று நாள்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மெஸ்ஸி டெல்லி , மும்பை கல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.