
மோகன்லாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன்போது அவரது வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதன்படி தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மோகன்லாலுக்கு 2015ஆம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கான உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதனை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன.
எனவே அது செல்லாது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது
