மேல் மாகாண நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று வேலைநிறுத்தம்

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று (21) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு தீர்மானித்துள்ளனர் .

இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளிடமிருந்து தங்கள் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வுகள் கிடைக்காததால், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில் இன்று இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.