
மெக்சிக்கோ விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவிற்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 8 பேர் இருந்துள்ளனர்.
அவர்களில் நால்வர் பொதுமக்கள் என்பதுடன், ஏனைய நால்வரும் மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மற்றுமொரு நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகாம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே இந்த விமானம் பயணித்ததாக மெக்சிகோ கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் நிலவிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
