மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய முகாம்!
-மூதூர் நிருபர்-
மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் ,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திருகோணமலை தனியார் மருந்தக உரிமையாளர் நலன்புரிச் சங்கத்தினால் இவ் இலவச வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் -கங்குவேலி, புளியடிச்சோலை கிராம மக்களுக்காக இவ் இலவச வைத்திய முகாம் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் வைத்திய முகாமில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு நன்மை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.







