-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச சபையினால் , தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பிரகலாதன் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, நூலக வாசகர்களுக்கிடையிலான போட்டி ,மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,சபை உறுப்பினர்களுக்கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நினைவுச் சின்னங்கள்,சான்றிதழ்கள் என்பனவும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், மூதூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமூக சேவையாளர் ,மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.







