மூதாட்டியை கல்லால் அடித்து கொன்று தின்ற இளைஞன்
இந்தியாவில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை ஒரு இளைஞன் கல்லால் அடித்து கொன்று நரமாமிசத்தை உண்டுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள சர்தானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி (வயது – 65 ) என்னும் மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து வயல் பகுதிக்கு ஆடுகளை மேய்சலுக்காக கொண்டு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த தோற்றத்திலும் செயல்களிலும் விசித்திரமான இளைஞன் கல்லால் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளான்.இந்த தாக்குதலிலி மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த அவரின் உடலை உண்ண தொடங்கியுள்ளார் குறித்த இளைஞன்.
இந்நிலையில், அந்த வழியாக வந்த அந்த மூதாட்டியின் மகன் பிரேன் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்து ஓடி சென்று ஊர் மக்களை அழைத்து வந்துள்ளார்.
ஊர் மக்களும் இதனை கண்டு அதிர்ந்து போய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர், குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
இதன் போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்ற இளைஞனே இந்த கொடூர செயலை செய்துள்ளதுடன் இவர் ராபீஸால் பாதிக்கப்பட்ட நாயால் கடிக்கப்பட்டவர், அதற்கு உரிய சிகிச்சை பெறாததால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவருக்கு ஹைட்ரொபோபியா எனப்படும் நாய் கடி பாதிப்பின் முதிர்ந்த நோய் தன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த அரிய நோய் தன்மை கொண்டவர்களுக்கு நீரை பார்த்தாலே அச்சம் ஏற்படும்.
மேலும், மூதாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் சுரேந்திரா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்