மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முயன்ற நபர் பலி

சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.