முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் கட்டாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் இருந்து மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற இரு இளைஞர்கள் தங்கியிருந்த இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விசுவமடு இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த சிவகுமார் தர்சன் (வயது – 21) சடலமாக காணப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞன் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்