முற்றாக எரிந்து நாசமாகிய வீடு: பரிதவிக்கும் குடும்பம்

கொங்கொல்ல பிரதேசத்தில் கலாவெவ வீதி உள்ள வீடொன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த வீட்டில் தாய் மற்றும் தந்தையும் அவர்களது 5, 10 மற்றும் 12 வயதுக்கு இடைப்பட்ட மூன்று பிள்ளைகளும் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனினும் பாடசாலை புத்தகங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் இக்குடும்பத்தை தற்காலிகமாக தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.