முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

-வவுனியா நிருபர்-

வன்னி மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளாரும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான, கிறிஸ்டோபர் டினேஸ், நேற்று வியாழக்கிழமை இரவு காசோலை மோசடி முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை, இன்று காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்