முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சி.ஐ.டியில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News