முத்தையன்கட்டு சம்பவம்: இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.,இதன் போது விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.
இதேநேரம் குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த போது, நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.