முதலுதவி பயிற்சி வழங்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம்
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டத்தில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் விழிப்புணர்வு செயற்றிட்டமானது இன்று புதன்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சியினையும் அது பற்றிய தெளிவூட்டல்களையும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி போதனாசிரியர் ந.இலங்கேஸ்வரன் வழங்கியிருந்தார்.
இங்கு 50க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.