முதலில் நாடாளுமன்றத்தில் கைரேகை வரவு முறையை அமுல்படுத்துங்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தொடர் வருகை குறைவாக இருப்பதால், கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவை அமுல்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்மொழிந்துள்ளார்.
கைரேகை அவசியம், அதை நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்குவோம், இன்று இங்கு எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதைப் பாருங்கள், நாங்கள் மொத்தம் 350,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 அமர்வுகளில் 25 அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர், என்று அவர் தெரிவித்தார்
நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த மில்லியன் கணக்கில் செலவிடப்படுகின்றது, ஆனாலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்வுகளில் கலந்து கொள்வதில்லை, என அவர் தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் சட்டத் துறை உள்ளிட்ட தொழில்களில் கட்டாய கைரேகை விதியை அமுல்படுத்த வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முடிந்தால் அனைத்துத் தொழில்களிலும் கட்டாய கைரேகை விதியை அமுல்படுத்துமாறு, அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.