முதலிரவில் அதிர்சி: அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்

இந்தியாவில் பெண் ஒருவர் திருமணம் முடிந்த மறு நாளே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆணுக்கும் கடந்த 26ஆம் திகதி திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்தின் பின்னர் முதலிரவன்று, மணமகள் வயிறு வலிக்கிறது என மணமகனிடம் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த மணமகன், உடனடியாக அவரை அழைத்து கொண்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளார். மணமகளை பரிசோதனை செய்த வைத்தியர்கள், மணமகள் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர்.இதனை கேட்டு மணமகன் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அடுத்த நாள் அந்த மணமகளுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.

மணமகளின் வீட்டாருக்கு அவர் கர்ப்பம் தரித்து இருக்கிறார் என முன்பே தெரிந்து உள்ளது. ஆனால், மணமகன் வீட்டாரிடம் இதனை அவர்கள் மறைத்து உள்ளனர் என கூறப்படுகிறது. சமீபத்தில் மணமகளுக்கு கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவரது வயிறு பெருத்து உள்ளது என மணமகன் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

மணமகளின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து வந்து, பெண்ணையும் அவரது குழந்தையையும் அழைத்து கொண்டு சென்று விட்டனர். அவர்கள் இருவரையும் கணவர் மற்றும் புகுந்த வீட்டார் ஏற்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இது தொடர்பில் இரு தரப்பில் இருந்தும் எந்த முறைப்பாடுகளும் கிடைக்க பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்