முதலாவது பெய்லி பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் இந்தியா வழங்கிய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பெய்லி பாலம் (Bailey Bridge) இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கையின் மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திற்கு இடையிலான மிக முக்கியமான போக்குவரத்துத் தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி –ராகலை வீதியில் உள்ள B-492 நெடுஞ்சாலையில் இந்த 100 அடி நீளமான பெய்லி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் இணைந்து இதனைத் திறந்து வைத்தனர்.

இந்திய இராணுவத்தின் ADGPI பிரிவினால், இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்த பாலம் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதான வீதிக்கான போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.