
முடங்கும் அரச மருத்துவமனைகள் – தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள்
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை, மீண்டும் தொடரவுள்ளது.
இந்த நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஒரு பகுதியாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் (External Pharmacies) வாங்குமாறு பரிந்துரைத்தல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் அறிவுறுத்துதல் போன்ற செயல்பாடுகளிலிருந்து விலகுவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
